சோனியா
காந்தியும், குஷ்புவும் ஒரே கொள்கையை உடையவர்
கள் என்பதால் குஷ்பு காங்கிரஸ் கட்சியில்
சேர்ந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை என்று
பா.ஜ.க தேசிய
செயலாளர் எச். ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின் போது குஷ்பு காங்கிரஸ்
கட்சியில் சேர்ந்தது குறித்து கேள்விகேட்டபோது அவர் கூறியதாவது:
குஷ்புவும்,
காங்கிரஸ் தலைவர் சோனியாவும் கொள்கை
ரீதியிலான பிணைப்புள்ளவர்கள். ஏன்னா கல்யாணமே பண்ணாமல்
குழந்தை பெறலாம் என்பது குஷ்புவின்
கருத்து. அதேபோன்று ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சட்டரீதியான அனுமதியளிக்கலாம் என்பது சோனியாவின் கருத்து
அதனாலான இரண்டுபேரும் காங்கிரஸில் சேர்ந்திருப்பது அதிர்ச்சியும் இல்லை, ஆட்சபனையும் எனக்கில்லை.
காங்கிரஸ் கட்சி மூழ்குகின்ற கப்பல்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டை திவாலாக்
கியும், கலாச்சாரம், பண்பாடு ரீதியாக அழித்தும்
ஒரு இந்தியரை தலைவராக வைத்துக் கொள்ள
முடியாத ஒரு கட்சியாக இருப்பதால்
அதிலிருந்து வாசன் வெளியேறியிருப்பது வரவேற்கத்தக்கது
என்பதிலே எனக்கும் உடன்பாடுதான்.
தமிழகத்தில்
பா.ஜ.கவின் வாக்கு
சதவீதம் குறித்து கேட்கிறீர்கள், அதிமுக, திமுக தவிர்த்து
10 சதவீதம் மக்கள் செல்வாக்கு உள்ள
கட்சியாக பா.ஜ.க
தமிழகத்தில் உள்ளது. கடந்த மக்களவைத்தேர்தலில்
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு 2 எம்.பிக்கள்
உள்ளனர். காங்கிரஸிக்கு நில்... திமுகவுக்கு நில்லோ...
நில்...
காங் கிரஸ் 4 சதவீதம் வாக்குகளில்
தற்போது வாசனுக்கு ஒன்னரையா, இளங்கோவனுக்கு இரண்டரையா என்பதுதான் போட்டியாக உள்ளது. இன்றைக்கு
இளைஞர்களின் ஒரே ஹீரோ நரேந்திரமோடிதான்.
2016 தேர்தலில் அது பிரதிபலிக்கும். பா.ஜ.கவின் சித்தாந்தத்தை
எற்போர் கட்சியி்ல் உறுப்பினராக சேரலாம். கூட்டணி்ககும் வரலாம் என்றார் எச்.
ராஜா.
No comments:
Post a Comment