உத்திரபிரதேசத்தில்
எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வந்த முலாயம் சிங்
யாதவும், லாலு பிரசாத்தும் சம்பந்தி
ஆகின்றனர்.
உத்திரப்
பிரதேசத்தில் ஒரு கட்டத்தில் முலாயம்
சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும்,
லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும்
எதிர் எதிர் கட்சிகளாக செயல்பட்டு
வந்தன.
முலாயம்
சிங் யாதவ் பேரனுக்கும், லாலு
பிரசாத் யாதவின் மகளுக்கும் பிப்ரவரி
மாதம் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இரு தலைவர்கள்
1990–களில்
ஜனதாதளம் கட்சியின் முக்கிய தலைவர்களாக விளங்கி
வந்த முலாயம் சிங் யாதவும்,
லாலு பிரசாத் யாதவும், பின்னர்
பல்வேறு காரணங்களுக்காக அந்த கட்சியில் இருந்து
விலகினர். இருவரும் தனித்தனியாக கட்சி ஆரம்பித்த போதும்,
பெரும்பாலும் நண்பர்களாகவே விளங்கி வந்தனர்.
சமாஜ்வாடி
கட்சியை தொடங்கிய முலாயம் சிங் யாதவ்,
உத்தரபிரதேசத்தில் மிகப்பெரும் சக்தியாக விளங்கி வருகிறார். தற்போது
அவரது கட்சியே அங்கு ஆளும்
கட்சியாகவும் இருந்து வருகிறது. இதைப்போல
லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய
ஜனதாதளத்துக்கும், பீகாரில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்து வருகிறது.
திருமணம்
சமீபத்தில்
நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த இரு கட்சிகளுக்கும்
பெருத்த பின்னடைவு ஏற்பட்டது. எனவே இந்த இரு
கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு
செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இரு கட்சிகளையும்
இணைத்து, ஜனதாதளத்தை மீண்டும் உருவாக்க முயற்சி நடப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நண்பர்களாக இருந்து வந்த இந்த
இரு தலைவர்களும், விரைவில் உறவினர்களாக மாறும் சூழல் உருவாகி
உள்ளது. முலாயம் சிங் யாதவின்
பேரனுக்கும், லாலு பிரசாத் யாதவின்
மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு
உள்ளது.
டிசம்பரில்
நிச்சயதார்த்தம்
அதன்படி,
முலாயம் சிங் யாதவின் பேரன்
தேஜ் பிரதாப் சிங்குக்கும், லாலு
பிரசாத் யாதவின் இளைய மகள்
ராஜ்லட்சுமிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு
உள்ளது. இவர்களுக்கான திருமண நிச்சயதார்த்தத்தை அடுத்த
மாதம் (டிசம்பர்) மத்தியிலும், திருமணத்தை பிப்ரவரியிலும் நடத்த இரு குடும்பத்தினரும்
முடிவு செய்துள்ளனர்.
1987–ல்
பிறந்த தேஜ் பிரதாப் சிங்,
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில்
மெயின்பூரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
புதிய கூட்டணியா?
இந்த திருமணத்தின் மூலம் சமாஜ்வாடி மற்றும்
ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சிகள் இணையுமா? அல்லது புதிய கூட்டணியை
உருவாக்குமா? என்பதே அரசியல் நோக்கர்களின்
எதிர்பார்ப்பாகும்.
No comments:
Post a Comment