Saturday, January 3, 2015

விஜய்யின் ‘கத்தி’யும் கவுண்டமணியின் '49ஓ'வும்

கவுண்டமணி நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்து வரும் படம் ’49ஓ’. கவுண்டமணி நடிக்க வருகிறார் என அறிவிப்பு வந்ததுதான் தாமதம் பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். 

இந்நிலையில் ‘49ஓ’ படத்தின் கதையும் விஜய்யின் ‘கத்தி’ படத்தின் கதையும் ஓரளவிற்கு ஒத்துப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன.

அரோக்கிய தாஸ் இயக்கத்தில் கே இசையில் படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. 

இந்நிலையில் ‘49ஓ’ படத்தின் கதை விவசாயம் , விவசாய மக்களின் துன்பம், மற்றும் எம்என்சி நிறுவனங்களின் ஆதிக்கம், விவசாயிகள் தற்கொலை போன்றவற்றை மையமாக கொண்டு உருவாகி வருகிறது என தகவல்கள் கசிந்துள்ளன. 

No comments:

Post a Comment