முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்யவில்லை மாறாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்ஸி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா ஹோட்டலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சுனந்தாவின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு இறுதி அறிக்கையை டெல்லி போலீசாரிடம் அளித்துள்ளது.
அந்த அறிக்கையில் சுனந்தாவின் மரணம் இயற்கை இல்லை என்றும் அவர் இறக்க விஷம் தான் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லி போலீசார் சுனந்தாவின் மரணம் குறித்த வழக்கை தற்கொலையில் இருந்து கொலையாக மாற்றியுள்ளனர்.
இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்ஸி கூறுகையில்,
சுனந்தாவின் மரணம் இயற்கை அல்ல. அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாயில் விஷத்தை ஊற்றியிருக்கலாம் அல்லது ஊசியாகவும் போட்டிருக்கலாம். அதை தற்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது என்றார்.

No comments:
Post a Comment