சமீபத்தில் குஜராத் சென்றிருந்தார் தனுஷ். அங்கு மகா சங்கராந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஊரே திரண்டு பட்டம் பறக்க விட்டு மகிழ்வது வழக்கம். இந்த கொண்டாட்டத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் தனுஷ் கலந்துகொண்டார். ஒவ்வொருவர் கையிலும் பல வண்ணங்களில் காற்றாடிகள் இருந்தன. விழாவின் ஒரு கொண்டாட்டமாக காற்றாடி பறக்கவிடும் நிகழ்ச்சி நடந்தது. அமிதாப், தனுஷ், அக்ஷராவும் ஊர் மக்களோடு சேர்ந்து காற்றாடி பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.
இது குறித்து அமிதாப் தனது இணையதள டுவிட்டர் பக்கத்தில், ‘அகமதாபாத்தில் பட்டம் பறக்கவிடும் திருவிழாவில் பங்கேற்றேன். சந்தோஷத்தை கொண்டாட இதைவிட வேறு என்ன வேண்டும்?' என குறிப்பிட்டிருக்கிறார். ‘அருமையான அனுபவம், அசத்தலான திருவிழா தினமாக அகமதாபாத் பயணம் இருந்தது.
வானம் நிறைய காற்றாடிகள் கண்களை கவர்ந்தன' என டுவிட்டர் பக்கத்தில் சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் தனுஷ். மூவரும் சேர்ந்து ஷமிதாப் இந்தி படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தினை புரமோட் செய்யவே இந்த பட்டம் விடும் விழாவில் மூவரும் கலந்துகொண்டு இருக்கிறார்கள¢. இது குறித்து பட யூனிட்டார் கூறுகையில், தனுஷ்&அக்ஷரா இடையே கெமிஸ¢ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. 3 படத்தில் ஸ்ருதியுடன் தனுஷுக்கு இருந்த கெமிஸ்ட்ரியை விட இது அசத்தலானது' என்றனர்.

No comments:
Post a Comment