‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணி இணைந்திருக்கும் புதிய படம் ‘ரஜினி முருகன்’. நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. டி.இமான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் தனியார் தொலைக்காட்சியில் வந்த காமெடி நிகழ்ச்சியில் பேசிய ‘என்னம்மா இப்படி பண்றீங்களமா’ என்ற பிரபலமான வசனத்தை கருவாக வைத்து யுகபாரதி பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். இப்பாடலுக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.
இப்பாடலின் படப்பிடிப்பை மதுரையில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், இப்பாடலை டி.இமானின் பிறந்தநாளான வரும் ஜனவரி 24-ந் தேதி படமாக்கவுள்ளார்களாம். அன்றைய தினத்தில் படப்பிடிப்பில் வைத்து டி.இமானின் பிறந்தநாளை கொண்டாடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்பாடலை மதுரையில் முடித்து விட்டு, அடுத்தக்கட்டப் படப்பிடிப்பை காரைக்குடியில் படமாக்கவுள்ளனர். அங்கு தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். இங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. வருகிற மே மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment