Friday, January 23, 2015

எந்த சீக்கியருடனும் டேட்டிங் போகவே மாட்டேன்:


டேட்டிங் குறித்து நடிகைகள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். பத்திரிகைகள் டேட்டிங் குறித்து கேட்கும் போது, பாவம், அவர்களும் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறது.

இலியானா டேட்டிங் போவதை வாக்கிங் போவதைப் போல யதார்த்தமாக எடுத்துக் கொண்டு சமீபத்தில் பேட்டியளித்தார். காஜல் அகர்வால் டேட்டிங் என்றதும் காலில் வெந்நீர் கொட்டியது போல் அய்யோ அம்மா என்றார். சரி, தாப்ஸி...?

இந்தியில் பிஸியாகியிருக்கும் தாப்ஸி, எந்த சீக்கியருடனும் டேட்டிங் போகவே மாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளார். ஏன் சீக்கியர்? தாப்ஸியின் தந்தை ஒரு சீக்கியர். ஆனால் மகளுக்கு தந்தையை தவிர வேறு எந்த சீக்கியரையும் பிடிக்காதாம். 

அதேபோல் நடிகர்கள் யாருடனும் டேட்டிங் செல்வதை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாதாம். அதேபோல் நடிகர் ஒருவரையோ, ஒரு சீக்கியரையோ கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள மாட்டாராம்.

தப்பித்தார்கள் சீக்கியர்கள்.


No comments:

Post a Comment