அஜீத்தின் பில்லா2வில் டைரக்டர் விஷ்ணுவர்தன் விலகியதையடுத்து, டைரக்டர் பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி எடுத்துள்ளார். அதேபோல் பில்லா படத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா பில்லா2விலும் இசையமைக்கிறார். கடந்த 2007ம் ஆண்டு அஜீத்நயன்தாராநமீதா நடிப்பில் டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவனின் இசையில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பில்லா2 எனும் பெயரில் எடுக்க இருக்கின்றனர். படத்திற்கான நாயகி மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. இதற்கிடையில் ‘பில்லா 2’ படத்துக்கு இரண்டே வாரத்தில் முழு திரைக்கதையையும் முடித்ததற்காக டைரக்டர் சக்ரியை பாராட்டினாராம் அஜீத்.

No comments:
Post a Comment