பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம்,செல்லாத செக்கைக் கொடுத்ததாலும், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையாலும் மனம் உடைந்த தமிழ் திரைப்பட பைனான்சியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கரூர் அண்ணாநகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். பைனான்ஸியரான இவருக்கு சொந்தமாக நிறைய லாரிகள் இருக்கின்றனர்.
பிஸினஸ்காரர்களுக்கு பைனான்ஸ் செய்து வந்த இவர் பின்னர் சினிமாக்காரர்களுக்கும் பைனான்ஸ் கொடுக்க ஆரம்பித்தார்.
நடிகர் பொன்னம்பலம் நடித்து, தயாரித்த அம்மையப்பன் படத்திற்கு இவர் பைனான்ஸ் செய்தார். படம் ரிலீஸானதும் பொன்னம்பலம் வாங்கிய தொகையை வட்டியுடன் செக்காக திருப்பி தந்தார்.
ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் செக் திரும்பி வந்து விட்டது. இதையடுத்து பொன்னம்பலம் மீது இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அடுத்த அடியாக இளங்கோவனின் அலுவலகத்தில் திடீரென வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் அளவுக்கு இளங்கோவன் வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இளங்கோவன் திடீரென விஷ மாத்திரையைச் சாப்பிட்டு தற்கொலை செய்து விட்டார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment