அஜீத்துடன் சேர்ந்து மங்காத்தா படத்துக்காக ஒரு செமத்தியான குத்தாட்டத்தைப் போட்டு முடித்துள்ளாராம் மும்பை அழகி கைனாட் அரோரா.
பெயர்தான் கைனாட் என்று வித்தியாசமாக உள்ளது. ஆனால் ஆளைப் பார்த்தால் செமத்தியா இருக்கிறார் அரோரா. மும்பை அழகியான இவரை கூப்பிட்டு மங்காத்தா படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
அஜீத்துடன் சேர்ந்து இந்தப் பாட்டுக்கு ஆடியிருக்கிறார் கைனாட். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் இளசுகளை துள்ளாட்டம் போட வைக்கும் வகையில் இருக்கிறதாம்.
நான்கு நாட்கள் படப்பிடிப்புக்காக அஜீத்துடன் இருந்தாராம் கைனாட். அப்போது அஜீத்தின் மனித நேயம், பழகும் தன்மை, எளிமை உள்ளிட்டவற்றை பார்த்து அசந்து போய் விட்டாராம். அந்த நிமிடமே அஜீத்தின் தீவிர ரசிகையாகவும் மாறி விட்டாராம் கைனாட்.
தற்போது அஜீத் புராணம் பாடி வரும் கைனாட், தனக்கு தமிழ் ரசிகர்கள் தரப் போகும் வரவேற்பைப் பார்த்து விட்டு தீவிரமாக தமிழ் சினிமாவில் குதிக்கத் தீர்மானித்துள்ளாராம்.
அஜீத்துடன் இணைந்து நடித்தது குறித்த கைநாட் அரோராவிடம் கேட்டபோது, அஜீத் சிறந்த நடிகர் மட்டுமல்ல, ஒரு சிறந்த மனிதரும் கூட என்று பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு கைனாட்டுகளும் அவசியம்தானே...!

No comments:
Post a Comment