திருமணம் குறித்து எல்லோருக்குமே விதவிதமான ஆசைகள் உள்ளன. அதில் ப்ரியங்கா சோப்ராவின் ஆசை ரொம்ப விசித்திரமானது.
அவருக்கு 6 முறை திருமணம் செய்ய வேண்டுமாம்.... அதுவும் ஒரே ஆண்மகனை!
பிரபரல பேஷன் பத்திரிகை ஒன்றின் இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்ற ப்ரியங்கா சோப்ரா, தனது திருமணம் பற்றி கூறுகையில், "என் திருமணம் பற்றி சில திட்டங்கள் வைத்துள்ளேன். அது எப்போதும் நினைவில் வைத்திருப்பதாக இருக்க வேண்டும். நான் ஆறு தடவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். வெயிட்... ரொம்ப மோசமா உங்க கற்பனையை ஓட்டாதீங்க... ஒரே ஒருவரைஆறு முறை திருமணம் செய்யணும். இதுதான் என் ஆசை.
எப்படி ஆறுமுறை திருமணம் என்கிறீர்களா....?
அம்பாலாவில் உள்ள எனது தாத்தாவின் வீட்டில் பாரம்பரிய முறைப்படி முதல் திருமணம் நடக்க வேண்டும். பின்னர் ஆஸ்திரேலியாவின் கடலுக்கடியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பாரியர் ரீப் பகுதியில் ஒருமுறை, லாஸ் வேகாஸ் சர்ச்சில் ஒருமுறை, ஸ்விட்ஸர்லாந்து சர்ச்சில் அந்த பாரம்பரிய கறுப்பு உடை அணிந்தபடி ஒருமுறை மற்றும் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்விட்சர்லாந்தின் அழகிய மலைகளின் உச்சிகளில் தலா ஒரு முறை என வித்தியாசமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
அது வாழ்நாள் முழுக்க மறக்க முடியாததாக இருக்கும்," என்றார்.
முஸ்லிம் முறைப்படி ஒருமுறை 'நிக்கா' செய்து கொள்ளவும் ஆசையாக உள்ளதாம்.
சமீபத்தில் வெளியான இந்திப் படம் ஒன்றில் ப்ரியங்கா ஏழு முறை திருமணம் செய்து கொள்வதாக நடித்திருந்தார்.
அந்த எஃபெக்ட் இன்னும் போகலியோ!

No comments:
Post a Comment