மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை "டர்ட்டி பிக்சர்" என்ற பெயரில் ஏக்தா கபூர் படமாக்கி வருகிறார். இதில் சில்க் ஸ்மிதாவாக வித்யா பாலன் நடித்து வருகிறார்.
இது குறித்து நடிகர் வினு சக்கரவர்த்தி அளித்துள்ள பேட்டியில் "வண்டிச்சக்கரம் படத்தில் நான் தான் சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினேன்.என் அனுமதியோடுதான் சில்கின் கதையை அவர்கள் எடுக்க வேண்டும். இல்லையெனில் படம் சென்சார் ஆகிற வரைக்கும் விடாமல் தொடர்வேன். அவரை பற்றி படம் எடுக்கிறவர்கள் என்னை தொடர்பு கொண்டால், உதவ தயாராக உள்ளேன். உண்மைக்கு மாறாக சில்க் பற்றி படம் வரவிடமாட்டேன்.
சில்க் ஸ்மிதாவாக படத்தில் நடிக்கும் வித்யாவுக்கு சோகம் வடியும் முகம். சில்க்கின் பெரிய அட்ராக்சனே அவரோட விசாலமான, சுண்டி இழுக்கும் கண்கள்தான். இது வித்யாவிடம் இல்லை. சில்க்காக நடிக்க ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே இவர்களில் யாரையாவது போட்டால் பெட்டராக இருக்கும்" என்று விமர்சித்தார்.
இது குறித்து ஏக்தா கபூர் அளித்துள்ள பேட்டியில் " வினு பேசுவது எதுவும் சரிகி்டையாது. படத்தில் யாரை நடிக்க வைக்க வேண்டும் என்பது என் முடிவு. அதில் தலையிட அவர் யார்? வித்யா ஒரு நல்ல நடிகை. வித்யா பற்றி தவறாக குறை சொல்லியிருக்கிறார்.
அவர் சில்கின் ரத்த சம்பந்தமான உறவுக்காரர் இல்லை. என் ஸ்கிரிப்ட்டை அவரிடம் காட்ட வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது. எந்த விதத்திலும் வினுவோட உதவி எனக்கு தேவைப்படாது. வினு என் மீது வழக்கு தொடுத்தால் அதை முறைப்படி சந்திப்பேன்." என்று பேட்டி அளித்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் டர்ட்டி பிக்சர் படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. மறைந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக பார்க்க முடியாதோ என்று ஏங்கி தவிக்கிறார்கள் ரசிகர்கள்.
இதையும் படியுங்களேன்.....

No comments:
Post a Comment