தலைப்பை படித்தவுடன் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏதோ, பிரச்சனை என்று நினைக்க தோன்றும். ஆனால் விஷயம் அதற்கு நேர்மாறானது'. வெளியீட்டுக்காக காத்திருக்கும் 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தின் இயக்குநர் ஏகாதசிக்கு, மறுபடியும் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர்.
ஒரு படம் துவங்கும்போது தயாரிபாளருக்கும், இயக்குநருக்கும் இடையே இருக்கும் உறவு, படம் முடியும் போது இருக்காது என்பது கோடம்பாக்கமே அறிந்த விஷயம். ஆனால் 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தின் இயக்குநர் ஏகாதசிக்கும், தயாரிப்பாளர் சந்திரசேகருக்கும் இடையே உள்ள உறவு படம் துவங்கியபோது எப்படி இருந்ததோ அப்படியே இதுவரை இருக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட், தேர்தல் என சில காரணங்களுக்காக படத்தை மே மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கும் சந்திரசேகர், ஏகாதசிக்கு அடுத்ததாக ஒரு படத்தை இயக்கச் சொல்லியிருக்கிறார்.
இதற்கு காரணம் 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தின் ரிசல்ட்டும், அதற்காக ஏகாதசி எடுத்துகொண்ட ஈடுபாடும்தான். அதற்காதான் இயக்குநர் ஏகாதசியை அன்பால் கட்டிப்போடு தனது அலுவலகத்தில் இடம் கொடுத்து அடுத்த படத்தின் பணியில் ஈடுபட வைத்திருக்கும் சந்திரசேகர், "முயற்சி செய்து தோற்றுபோனால் பரவாயில்லை. ஆனால் முயற்சியே பன்னாமல் தோற்றுபோக கூடாது. 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படம் எனக்கு ரொம்ப திருப்தியை கொடுத்திருக்கிறது. அந்த படத்திற்காக ஏகா உழைத்ததை நான் பக்கதில் இருந்து பார்த்திருக்கிறேன். படமும் நல்ல தரமாக வந்திருக்கிறது. அதனால்தான் அடுத்ததாக ஒரு படத்தை ஏகாவை இயக்கச் சொல்லியிருக்கிறேன்." என்றார்.
தொடர்ந்து படங்களை தயாரித்துகொண்டிருக்கும் சந்திரசேகர், எந்த தயாரிப்பாளரும் செய்யாத ஒரு சாதனையையும் செய்ய இருக்கிறார். கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், எஸ்.பி.ராஜகுமார் இயக்கத்தில் 'பாக்கனும் போல இருக்கு' என்ற படத்தை தயாரிக்க ஆரம்பித்து அந்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார். தற்போது டப்பிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அப்படத்தையும், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தையும் மே மாதம் வெளியிடப்போகிறாராம்.
(இந்த தொடரில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே!)
இதையும் படியுங்களேன்.....

No comments:
Post a Comment