சன் பிக்சர்சே வெளியிட்டிருக்க வேண்டிய படம். மாப்பிள்ளையை நாங்க ரிலீஸ் பண்ண போறதால இந்த நேரத்தில் எங்களால் செய்ய முடியாம போச்சு. ஆனால் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை மட்டும் நாங்க வாங்கியிருக்கோம். நான் இந்த படத்தை பார்த்துட்டேன். ரொம்ப பிரமாதமா இருக்கு. இப்படி வாயார பாராட்டினார் சன் பிக்சர்சின் செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இவரது சர்க்கரை வார்த்தைகளுக்கு காரணமாக அமைந்த படம் அன்வர்.
ராம்கோபால் வர்மாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கமல் நீரத் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பிரகாஷ்ராஜ், பிருத்விராஜ், மம்தா, லால் என்று பெரிய நட்சத்திர கூட்டமே இருக்கிறது அன்வரில். தமிழ், மலையாளம் இருமொழிகளில் தயாரான இப்படத்தை வருகிற 11 ந் தேதி தமிழகமெங்கும் வெளியிடப் போகிறார்கள்.
இதுவரை நாம் வழக்கமாக பார்த்து வந்த பிருத்விராஜை இந்த படத்தில் பார்க்க முடியாது. ஏனென்றால் இதில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார் ப்ருத்வி. நமக்காக திரையிடப்பட்ட ட்ரெய்லரில் ரத்தம் மட்டும்தான் தெறிக்கவில்லை, மற்றபடி ஒரே ரணகளம்தான்! பயணம் படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்த பிரகாஷ்ராஜ், இதில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இப்பவே இந்த படத்தை பற்றி கேள்விப்பட்ட விநியோகஸ்தர்கள் தெலுங்கு மற்றும் இந்திப்பட வெளியீட்டு உரிமையை வாங்கி சென்றிருக்கிறார்களாம்.

மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பிகிறாங்களோ ?
ReplyDelete