பாலா நடிக்க கூப்பிட்டா கதை கூட கேட்க மாட்டேன். ஓகே சொல்லிடுவேன்" என்று நரேன் ஒரு பேட்டியில் சொல்லப் போக, அது மெல்ல மெல்ல டைவ் அடித்து 'பாலா படத்தில் நரேன்' என்கிறளவுக்கு செய்தியானது.
'தவ்வி குதிச்ச தவளை தாழ்வாரத்துல பண்ணுச்சாம் ரகளை'ங்கிற மாதிரி, இந்த நியூஸ் தாவி குதித்து பாலாவின் காதுக்கே போய்விட்டது. "என்னது என் படத்துல நரேனா?" நல்லா திங்க் பண்ணுறாங்கப்பா என்று கமெண்ட் அடித்தாராம் அவர். "நான் என்னோட அடுத்த படத்தை பற்றியே இன்னும் யோசிக்கலை. அதுக்குள்ளே அதுல ஹீரோவாக நடிக்கறது யாருங்கிற அளவுக்கு போயிருச்சா மேட்டர்" என்று சிரித்தவர், "இந்த நிமிடம் வரைக்கும் அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை" என்று கூறினாராம்.
இது ஒருபுறம் இருக்க, ஏப்ரல் 7 ந் தேதி அவன் இவன் வெளிவருவது உறுதி என்று நம்பிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஜர்க் கொடுக்கிற மாதிரி ஒரு செய்தி. இந்த தேதியில் படத்தை கொண்டு வர பாலா முயல்கிறார் என்பது நிஜம்தான். ஆனால் ஏப்ரல் 13 ந் தேதி தேர்தல். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு படத்தை வெளியிட்டால் தியேட்டர் பக்கம் யாரும் வர மாட்டார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே அவன் இவன் உள்ளிட்ட மற்ற படங்கள் கூட ஏப்ரல் 13 க்கு பிறகுதான் வெளிவரும் என்று கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

No comments:
Post a Comment