திருநங்கைகள் அடித்த கும்மி சப்தத்தில் சென்சார் அலுவலகம் இருக்கும் சாஸ்திரி பவனே நடுங்கிப் போய் கிடக்கிறது. எங்க படத்துக்கு எப்படி ஏ கொடுக்கலாம் என்பதுதான் அவர்களின் கேள்வி. கொடுத்தது கொடுத்ததுதான். அதை மாற்ற முடியாது என்று மல்லுக்கட்டுகிறது சென்சார். இந்த குடுமிப்பிடி நாடகத்தில் நேரத்தை வேஸ்ட் பண்ணாமல் படத்தின் முதல் பிரதியை முடித்துக் கொடுத்துவிட்டார் டைரக்டர் விஜய பத்மா.
தயாரான படத்தை ஆவலோடு திரையிட்டு பார்ப்பதுதானே இயல்பு? நேற்று இப்படத்தை திரையிட்டு பார்க்க முடிவு செய்தது தயாரிப்பாளர் வட்டாரம். இந்த நேரத்தில்தான் எங்கிருந்தோ ஒரு போன். ஆடுகளம் படத்தில் வில்லனாக நடித்த ஈழக்கவிஞர் வஐசெ செயபாலன்தான் எதிர்முனையில் இருந்தார். "உங்க படத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டேன். நானும் பார்க்கணும்னு விரும்புறேன். வரவா" என்றாராம்.
அவரது விருப்பப்படியே உள்ளே அழைத்துக் கொண்டார்கள் கவிஞரையும்! படம் முடிந்து வெளியே வந்த கவிஞர், கண்கலங்க வச்சுட்டீங்களே என்று விஜயபத்மாவின் கைகளை பிடித்துக் கொண்டாராம். அதுவும் இந்த படம் முப்பதே நாட்களில் எடுக்கப்பட்டதை அறிந்ததும் ஜன்னி வருகிற அளவுக்கு பாராட்டி தள்ளினாராம்! இவ்வளவு எதேச்சையாக இருக்கிற கவிஞருக்கு அடுத்த படத்தில் பெரிய ரோல் கொடுக்க வேண்டும் என்று நெஞ்சுருக முடிவெடுத்திருக்கிறாராம் விஜய பத்மாவும்!

No comments:
Post a Comment