பாலிவுட் ஹீரோயின் பிராச்சி தேசாய் கோலிவுட்டில் என்ட்ரி ஆகிறார். அருண் விஜய் நடிக்க, மகிழ் திருமேனி இயக்கும் 'தடையறத் தாக்க' படத்தில் இவர் அறிமுகமாகிறார். இது பற்றி இயக்குனர் மகிழ்திருமேனி கூறியது: சிட்டியில் டிராவல்ஸ் வைத்து நடத்தும் ஒரு இளைஞனின் வாழ்க்கை. அவன் சந்திக்கும் போராட்டம், காதல்தான் கதை. அருண் விஜய்க்கு ஜோடியாக புதுமுகம் பலரை பரிசீலித்தும் பலனில்லை. இந்தியில் 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை', 'ராக் ஆன்' படங்களை பார்த்தேன். அதில் நடித்த ஹீரோயின் பிராச்சி தேசாய் நடிப்பு என்னை கவர்ந்தது. ஹீரோயின் கேரக்டருக்கு அவர்தான் பொருத்தம் என்று தயாரிப்பாளரிடம் கூறினேன். ஒகே சொன்னார். மும்பையில் பிராச்சியை சந்தித்தபோது முதலில் நடிக்க மறுத்தார். ‘தமிழில் நிறைய படங்கள் வந்தது. ஒப்புக்கொள்ளவில்லை. கதையும், கேரக்டரும் முக்கியம்Õ என்றார். வற்புறுத்தி கதை கேட்க வைத்தேன். அவருக்கு பிடித்துவிட்டது. ஆனால் சம்பளம் பேசும்போது எதிர்பார்க்காத தொகையை கேட்டார். சம்பளம் குறைக்கவும் பலமுறை பேசிய பின் ஒரு வழியாக சம்மதித்தார்.

No comments:
Post a Comment