ஸ்ரேயா கூறியது:தீபா மேத்தாவின் ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்Õ, ஜீவாவுடன் ‘ரவுத்திரம்Õ, மோகன்லாலுடன் ‘கேசனோவாÕ படங்களில் நடித்து வருகிறேன். சல்மான் ருஷ்டி எழுதிய நாவலை தழுவித்தான் ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்Õ எடுக்கப்படுகிறது. அந்த நாவலை பல முறை படித்தேன். அவர் படைத்த வேடங்கள் மிகவும் கவர்ந்தது. இதில் நான் ஏற்றிருக்கும் வேடம் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது.மும்பை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது பஸ்சில் செல்வேன். தூரத்திலிருந்து பார்த்தபோது நான் செல்லவேண்டிய பஸ்தான் வருகிறது என்று எண்ணி வேறு பஸ்சில் ஏறிவிட்டேன். அந்த பஸ் ஓர் இடத்தில் நின்றது. திடீரென்று இறங்கிய எனக்கு வழி தெரியவில்லை. அருகே இருந்த பார்வையற்றோர் பள்ளியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த சிறுவனிடம், வழி கேட்டேன். ‘நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?Õ என்றான். அப்போது பஸ் மாறி ஏறியதை சொன்னேன். உடனே அவன், ‘பார்வையில்லாத நான், கிரிக்கெட் பந்து எந்த திசையில் வருகிறது என்பதை சரியாக கணித்து அடிக்கிறேன். ஆனால் நீங்கள் எப்படி பஸ் மாறி ஏறினீர்கள்Õ என்று கேட்டான். அது என்னை யோசிக்க வைத்தது. அதே நேரம், பார்வையற்றோருக்கு உதவ வேண்டும் என எண்ணமும் ஏற்பட்டது. அதனால்தான் இப்போது சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment