சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை லிங்குசாமி இயக்குவதாகவும் விஷால் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.இது பற்றி லிங்குசாமி கூறியது:சண்டக்கோழி படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது எளிதான காரியமல்ல. அப்படி எடுத்தால், முதல் பாகத்தை விட விறுவிறுப்பாக எடுக்க வேண்டும். இப்போதைக்கு அந்த படத்தின் இரண்டாம் பாகம் இயக்கும் எண்ணமில்லை. நானும் விஷாலும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளோம். அது முன்பே எடுத்த முடிவு. வேட்டை படத்தை முடித்த பின் விஷாலை இயக்குவேன். ஆனால் அது Ôசண்டக்கோழிÕ பார்ட் 2 கிடையாது. அது வேறு கதை. ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி அம்சங்கள் நிறைந்த படமாக அது இருக்கும். ஒவ்வொரு படத்தையும் வெரைட்டியாக தர விரும்புகிறேன். எனவேதான் திரைக்கதை அமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன். திரைக்கதை ரெடியாகிவிட்டால், ஷூட்டிங்கை வேகமாக முடித்துவிடுவேன். இதுதான் எனது பாணி.
இவ்வாறு லிங்குசாமி கூறினார்.
No comments:
Post a Comment