ஆரம்பத்தில் பக்குவம் இல்லாமல் இருந்தேன்; அதனால் சில தவறுகள் செய்தேன்; இப்போது பக்குவம் வந்து விட்டது என்று நடிகை இலியானா தத்துவத்தை உதிர்த்திருக்கிறார். கேடி படம் மூலம் தமிழிலில் அறிமுகமானவர் நடிகை இலியானா. அந்த படத்துக்கு பிறகு வாய்ப்புகள் இல்லாததால் கணாமல் போனவர், தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி விட்டார். இப்போது இந்த கேடி நாயகியை கோடிகளை கொட்டிக் கொடுத்து வரவேற்றிருக்கிறது தமிழ் சினிமா. திரையுலகில் நுழைந்த காலகட்டத்தில் நிறைய தவறுகள் செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கும் இலியானா, சினிமாவில் உள்ள நெளிவு சுழிவுகளை தத்துவமாக கூறியிருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், "சினிமாத்துறைக்கு நான் வந்தபோது இங்கு எனக்கு யாரையும் தெரியாது. அதனால் வழிகாட்ட ஆளின்றி திணறினேன், சில தவறுகளையும் செய்தேன். தவறுகளில் இருந்துதானே பாடம் கற்றுக் கொள்ள முடியும். நானும் அப்படித்தான். அந்த தவறுகளில் இருந்து நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டேன். இப்போது பக்குவம் வந்துவி்ட்டது. என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் எல்லா விஷயங்கள் பற்றியும் தெளிவாக கேட்கிறேன். படத்தி்ல் எனது கேரக்டர், கதை என கேட்டு விட்டு, சம்பளம், அவர்கள் போடும் நிபந்தனைகள் போன்றவற்றை கேட்டு, அதற்கேற்ப தேதிகளை அட்ஜஸ்ட் செய்து அதன் பின்னர்தான் படத்தை ஒப்புக் கொள்கிறேன். எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என விரும்கிறேன். அதனால்தான் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடிந்தது. பணம் சம்பாதிப்பது மட்டும் எனது குறிக்கோள் இல்லை. வருடத்திற்கு ஒரு படம் நடித்தால் கூட போதும். ஆனால் என் கதாபாத்திரம் பேசப்பட வேண்டும். வங்கிக் கணக்கை பார்த்தால் நல்ல நடிகை என்று பெயர் எடுக்க முடியாது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் வெளியாக வேண்டும் என்று நினைத்தால் நல்ல படங்களே அமையாது, என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment