சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 2, 3 மற்றும் 4வது இடங்கள் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கட்சிகளிடையே எழுந்துள்ளது. நேற்று நடந்த ஓட்டுப்பதிவில், 78 சதவீதம் பேர் ஓட்டளித்திருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் தவிப்புகளுக்கு, வரும், 21ம் தேதி முடிவு தெரியும்.
சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமுடன் ஓட்டுப் போட்டதால், ஓட்டுப்பதிவு சதவீதமும் வெகுவாக அதிகரித்தது. இத்தொகுதியில் தி.மு.க., தொடர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த, ம.தி.மு.க., இத்தேர்தலில் களமிறங்கியது.வைகோவின் சொந்த ஊர் உள்ள தொகுதி என்பதால், இப்பகுதியில் வைகோவுக்கு என தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. மேலும், தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அந்த ஓட்டுகளும் உள்ளன. ஆனால், தேர்தலில் வைகோ போட்டியிடவில்லை. எனினும், கடந்த 2001ம் ஆண்டு தனித்துப் போட்டியிட்ட, ம.தி.மு.க., சார்பில் களமிறக்கப்பட்ட இதே வேட்பாளர், சதன் திருமலைக்குமார், 20 ஆயிரம் ஓட்டுகள் பெற்று, அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பசாமியிடம் 32 ஆயிரம் ஓட்டுகளில் தோல்வியுற்றார். தற்போது, ம.தி.மு.க.,வுக்கு இரண்டாவது இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக,

அக்கட்சியினரே கூறுகின்றனர்.
தி.மு.க.,வை பொறுத்தவரை, தற்போது எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும், ஒன்றியம் மற்றும் கிளை மட்டங்களில் தொண்டர் பலம் கொண்ட கட்சி. இந்த இடைத்தேர்தலிலும், மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில், தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்களமிறக்கப்பட்டனர். வெற்றி அல்லது இரண்டாவது இடம், தி.மு.க.,வுக்கே என்று அக்கட்சியினர் கூறுகின்றனர். "சங்கரன்கோவிலில் போட்டியிடத் தயாரா?' என்று முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் சவால் விட்டதால் தான், இந்த தேர்தலில், தே.மு.தி.க., களமிறங்கியது. தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கவே விஜயகாந்த் விரும்பினார். ஆனால், கட்டாயம் காரணமாக களமிறங்கியது தே.மு.தி.க.,வழக்கமாக, தேர்தல்களில், தே.மு.தி.க., மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். ஆனால், சங்கரன்கோவில் தொகுதியில், ம.தி.மு.க.,வுக்கு உள்ள செல்வாக்கு காரணமாக, மூன்றாவது இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், தங்களது பலத்தை நிரூபித்தாக வேண்டிய தர்மசங்கடத்தில் இருந்தது, தே.மு.தி.க., இல்லாவிட்டால், அடுத்த வாரம் துவங்கும் சட்டசபை கூட்டத்தொடரில், தே.மு.தி.க.,வினரை ஆளுங்கட்சியினர் கிண்டல் செய்யும் நிலை ஏற்படும்.எனவே, இந்த தேர்தலை பொறுத்தவரை, 2வது மற்றும் 3வது இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. யாருக்கு இந்த இடம் கிடைக்கும் எனத் தெரியாமல், ம.தி.மு.க., - தி.மு.க.,

- தே.மு.தி.க., கட்சிகளின் நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.இந்த தவிப்புகளுக்கு வரும், 21ம்தேதி விடை கிடைக்கும். அன்று காலை, 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. 10 மணிக்குள் யாருக்கு எந்த இடம் என்பது தெரிந்துவிடும்.
ஓட்டளிப்பதில் ஆர்வம்:சங்கரன்கோவிலில், காலை, 8 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவில், காலை, 10 மணிக்கு, 18 சதவீதமும், 11 மணிக்கு, 38 சதவீதமும், 12 மணிக்கு, 56.44 சதவீதமும், பிற்பகல், 2 மணிக்கு, 70 சதவீதமும் பதிவாகியது. மாலை, 5 மணிக்கு ஓட்டுப்பதிவு நேரம் முடிந்த பிறகும் நீண்ட வரிசையில் நின்றவர்களுக்கு போலீசார் டோக்கன்கள் வழங்கினர். சங்கரன்கோவில் தொகுதியில் 75 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment