இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் இன்று இலங்கை சென்றுள்ளார். இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதற்கு பல நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. இந்தியா மட்டும் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த தீர்மானத்தால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அரசுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பரபரப்பான சூழ்நிலையில், பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காலித் சமீம், 4 நாள் பயணமாக இன்று இலங்கை தலைநகர் கொழும்பு சென்றுள்ளார். அதிபர் ராஜபக்சே, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்சே மற்றும் முப்படைகளின் தளபதிகளை சந்தித்து பேசுகிறார். இந்த அவசர பயணத்தின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.
இதேபோல் போரால் பாதிக்கப்பட் கிளிநொச்சி, திருகோணமலை உள்ளிட்ட வட, கிழக்கு மாகாணங்களுக்கும் சென்று பார்வையிடுகிறார். இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானத்தையொட்டி பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காலித் சமீம் இலங்கை சென்றுள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment