மனவளர்ச்சி குன்றிய தந்தைக்கும், 5 வயது குழந்தைக்கும் உள்ள பாசப் பிணைப்பை திரைக்கதையாக அமைத்து வெளிவந்து, பலரை கலங்க வைத்தது 'தெய்வத்திருமகள்'.
இப்படம் I AM SAM என்ற படத்தின் தழுவல் என்று கூறப்பட்டாலும், திரைப்பட விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பேசப்பட்டது.
'தெய்வத்திருமகள்' திரைப்படம் OSAKA FILM FESTIVAL-ல் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்ள விக்ரம் மற்றும் இயக்குனர் விஜய் ஜப்பான் சென்றார்கள்.
இந்த விழாவில் 'தெய்வத்திருமகள்' திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படத்திற்காக GRAND PRIX AWARD மற்றும் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் என இரண்டு விருதுகளை தட்டி சென்றது.
மொத்தம் நான்கு விருதுகள் தான் இவ்விழாவில் கொடுக்கப்படும். சிறந்த புதுமுக இயக்குனர் விருது மலேசிய இயக்குனருக்கும், ரசிகர்கள் விருது ஒரு கொரிய திரைப்படத்திற்கும் கிடைத்தது.
மற்ற இரண்டு விருதுகளும் 'தெய்வத்திருமகள்' படத்திற்கு கிடைத்தது. இவ்விருதுகள் 'தெய்வத்திருமகள்' படக்குழுவினருக்கு தெம்பூட்டியிருக்கிறது. இதே குழுவினர் இப்போது ' தாண்டவம்' படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
No comments:
Post a Comment