இலங்கையின் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற தலைப்பில் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள சேனல் 4 நிறுவனம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த அதிகாரபபூர்வமான எதையும் வெளியிடவில்லை.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் எப்படிக் கொடூரமாகக் கொல்லப்பட்டான் என்ற காட்சிகள் அதில் உள்ளன. பிரபாகரன் குறித்தும் பரபரப்புக் காட்சிகள் இருப்பதாக முன்பு கூறப்பட்டது. இருப்பினும் அப்படி எதுவும் இல்லை. மாறாக இலங்கை அரசு வெளியிட்ட வீடியோக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள்தான் உள்ளன. இவையும் கூட அதிகாரப்பூர்வமற்ற தகவல் என்றே சேனல் 4 தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த 2வது ஆவணப்படத்தில் உள்ள பல காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன. ஈவு இரக்கமற்ற கொடூரர்கள் கூட இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்ற உணர்வு வருகிறது.
இந்த ஆவணப்படத்தில் கேட்கப்பட்டுள்ளதைப் போலவே, உலக சமுதாயம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்விதான் நமது மனதிலும் எழுகிறது.
No comments:
Post a Comment