மூன்றாவது அணி அமைக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று உத்தரபிரதேச மாநில முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ள அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இந்த நிலையில், சமாஜ்வாடிகட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தனது ஆதரவை உறுதி செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் தூதுவராக செயல்பாடுகிறார் என்றும் செய்திகள் தெரிவித்துள்ளன. சமாஜ்வாடி கட்சி தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வெளியிலிருந்து ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment