கிருத்திகா உதயநிதி படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னர், குறும்படங்களை இயக்கிய அனுபவம் இருப்பதால் இந்த வெள்ளித்திரை முயற்சியாம். JAIPUR INTERNATIONAL FILM FESTIVAL-ல் சிறந்த குறும்பட இயக்குனருக்கான விருதினை பெற்று இருக்கிறார் கிருத்திகா உதயநிதி.
அவர் வெள்ளித்திரைக்கு இயக்கப் போகும் படம் அவார்டுக்கானதாக இல்லாமல், கமர்சியலான கதை தானாம்.
ரொமான்டிக் காமெடி கதையை தயார் செய்து வரும் கிருத்திகா, தயாரிப்புக்காக 'ரெட் ஜெயண்ட்' நிறுவனத்தை அணுகியுள்ளார். அலுவலகத்துக்கு வரச் சொல்லி, அவரிடம் கதை கேட்டு, உதயநிதி தன் 'ரெட் ஜெயண்ட்' நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க ஒப்புக் கொண்டாராம்.
தற்போது 'ரெட் ஜெயண்ட்' அலுவலகத்தில் இப்படத்தின் டிஸ்கஷனுக்காக அறை ஒதுக்கப்பட்டு, பரபரப்பாக கதை விவாதம் நடந்து வருகிறதாம்.
" உங்க படத்துக்கு ஹீரோ யாரு மேடம்..? "
No comments:
Post a Comment