சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த 17வயது மாணவனை 37 வயது பள்ளி ஆசிரியை கடத்திச் சென்றதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர்.
டெல்லி அருகே பதுங்கியிருந்த 2 பேரையும் போலீசார் பிடித்தனர். மாணவன், பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டதால், காப்பகத்தில் மாணவன் ஒப்படைக்கப்பட்டான். பள்ளி ஆசிரியை சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர்கள் மீட்கப்பட்டது குறித்து திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
மாணவன் கடத்தப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதற்கிடையில், ‘லஞ்ச ஊழல் மற்றும் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு’ என்ற தன்னார்வ அமைப்பின் தலைவர் விஸ்வமூர்த்தியின் உதவியை ஆசிரியையின் தந்தை கேட்டுள்ளார். இந்த அமைப் புக்கு 14 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. அவற்றின் மூலம் ஆசிரியை, மாணவனின் போட்டோவை கொண்டு தேடப்பட்டது.
அந்த அமைப்பின், அரியானா மாநிலம், குர்கான் நகரைச் சேர்ந்த ஒரு உறுப்பினர், ஆசிரியை மற்றும் மாணவனை பார்த்து சென்னை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அந்த அமைப்பினர் போலீசாரை அழைத்து கொண்டு அங்கு சென்றனர். அங்கு ஆசிரியை குமுதுவின் தோழி ஒருவரது வீட்டில் அவர்கள் தங்கியிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் குமுதுவும், மாணவனும் சென்னை வர மறுத்துள்ளனர். வலுக்கட்டாயமாகவே அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். ‘நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்கிறோம். எங்களை தடுக்க வேண்டாம்’ என்று போலீசாரிடம் குமுது கூறியுள்ளார்.
எங்களை பிரிக்க நினைத்தால் தற்கொலை செய்வோம் என்றும் இருவரும் மிரட்டியுள்ளனர். ‘மாணவனுக்கு வயது 17தான் ஆகிறது.
அதனால் சென்னை வந்து எழுதிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள்’ என்று போலீசார் கூறியுள்ளனர். அதற்கு, மாணவன் மேஜர் ஆகும் வரை காத்திருக்கத் தயார் என இருவருமே தெரிவித்துள்ளனர். ஆனால் பெற்றோர் வீட்டிற்கு செல்ல மாட்டோம் என்பதில் உறுதி யாகவே இருந்துள்ளனர்.
இருவரையும் தனித்தனியாக விசாரித்த போதும் இருவருமே உறுதியாக இருந்ததால், அவர்களை போலீசார் பலவந்தமாக சென்னைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குமுதுவிடம் இருந்த 20 சவரன் நகை, ரூ.80 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment