கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளதற்கு போராட்டக் குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 130-நாட்களைக் கடந்து தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. நேற்றைய போரட்டத்தின் போது ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், சென்னையில் முதல்வரை சந்தித்து பேசியது தொடர்பான விவரங்களை பொதுமக்களிடம் விளக்கினார்.
பின்னர், அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment