பாலிவுட் நடிகர் நடிகைகள் போடும் சண்டை விளம்பரத்துக்காகவா இல்லை உண்மையாகவா என்பதை கண்டுபிடிப்பதற்குள் அதை பற்றி மறந்து போகிறார்கள். இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தும், இந்தி நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கும் இணைந்து நடித்த படம் மர்டர்.இந்த படத்தில் இருவருக்குமிடையே ஒரு முத்தக்காட்சி(லிப் டூ லிப்) இருந்தது.
இம்ரான் ஒரு பேட்டியில் மல்லிகா ஷெராவத்துக்கு முத்தம் கொடுக்க(படத்தில் கொடுத்த முத்தத்தை பற்றித் தான்) தெரியவில்லை என்று கூறினார். இதை கேட்ட மல்லிகா “மர்டர் படத்தில் இம்ரானுக்கு முத்தம் கொடுத்ததை விட “ஹிஸ்ஸ்” படத்தில் பாம்பிற்கு கொடுத்தது தான் நன்றாக இருந்தது. இம்ரானை விட பாம்பு நன்றாக ஒத்துழைத்தது” என்று பொங்கி விட்டார்.
இதை கேட்ட ஆண்மகன் சும்மா இருப்பாரா “பாம்புக்கு முத்தம் கொடுத்தவர் அடுத்ததாக பாம்பாட்டிக்கு முத்தம் கொடுத்து நடிக்கட்டும் அவர் இன்னும் நன்றாக ஒத்துழைப்பார்” என்று கூறிவிட்டார். அடுத்தது மல்லிகாவுடைய முறை அவர் என்ன சொல்லப் போகிறார் என காத்திருக்கிறது இந்தி திரையுலகம்.
No comments:
Post a Comment