தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்து, பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
அப்போது அவர், ‘’அண்ணா நூலகத்திற்கு தீக்குளிப்பதாக கூறும் கருணாநிதி, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம்.
ஓட்டுக்காக இங்கு வந்து நடித்து சென்றுள்ளார். ஜெ., முன்னால், ’ஆமாம்’ போட என்னால் முடியாது.
32 அமைச்சர்கள் தேர்தல் பணிக்கு வந்த போதே, என் வேட்பாளர் ஜெயித்துவிட்டார். தொண்டர் யாரும் மனம் தளர வேண்டாம். அ.தி.மு.க., கூட்டணியில் எனக்கு விருப்பமில்லை. சேலத்தில் தொண்டர்கள் கூறியதால், ஒப்புக்கொண்டேன்.
நான் பேரம் பேசியதாக அவர்களால் கூறமுடியுமா? சட்டசபையில், 10 நாட்கள் தானே "சஸ்பென்ட்' செய்துள்ளார்கள். அதன் பின் நிச்சயம் வருவேன்.
நீங்கள் தவறு என நினைக்கும் அதே தவறை, மீண்டும் செய்வேன். என்னுடைய தலைவர் எம்.ஜி.ஆர்.,ன் கட்சி என்பதால், இத்தனை நாள் அமைதி காத்தேன்.
என்னை சீண்டினால், பல உண்மைகளை வெளியிடுவேன். நானும் சினிமாவில் இருந்தவன் என்பதால்! தேர்தல் பணிக்கு அனுப்பியது போல, கடலூர் தானே புயலுக்கு, அமைச்சர் படையை அனுப்பியிருக்கலாமே’’ என்றார்.
No comments:
Post a Comment