இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர் நேற்று வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது 100-வது சதத்தை பதிவு செய்து உலக சாதனை படைத்தார்.
இந்த சதத்தினை அடிப்பதற்கு ஒரு வருடம் எடுத்துக் கொண்ட சச்சின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவேண்டும் என்றும் கண்டனக் குரல்கள் எழும்பின.
நேற்று 100-வது சதமடித்த பிறகு பேட்டியளித்த சச்சின் இந்த சதத்தை அடிப்பதற்குள் மிகுந்த மன நெருக்கடிக்கு ஆளானேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்று ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சச்சின் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் 'புகழின் உச்சியிலிருக்கும் போதே ஓய்வு பெறுவீர்களா?' என்று கேட்டதற்கு; ''சாதனையை நிகழ்த்திய உடனே ஓய்வா என்று அனைவரும் கேட்கின்றனர்.
புகழின் உச்சியில் இருக்கும் போது விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதென்பது சுயநலமான செயலாகும். என் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இதன் மூலம் எனது இதயபூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இனிவரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவேன்'' என்றார் சச்சின்.
No comments:
Post a Comment