அமெரிக்காவின் உதவி ராஜாங்கச்செயலாளர் ராபாட் ஓ பிளேக், வாஷிங்டனில் நேற்று செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ‘’இலங்கையின் நலன்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கம் என்பன முக்கியமானவை. இதன் மூலம் அவர்கள் உண்மையான அமைதியையும் பாதுகாப்பையும் அடைய முடியும்.
இல்லையேல், சொந்த சமூகத்தினரின் கோபத்தினால் நாட்டில் புதிய வன்முறைகள் அதிகரிக்கலாம். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதலுக்கும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மீளத்தோன்றும் பெற்ற கிளர்ச்சிகளை தொடர்ச்சியாக அனுபவிக்கிறார்கள். உலகில் நிகழ்ந்த பல உள் நாட்டு மோதல்கள் இந்த அனுபவத்தை தந்துள்ளன.
இலங்கையிலும் இதே போன்ற நிலையை நாம் எதிர்பார்க்கக்கூடும் என ராபர்ட் ஓ பிளேக் தெரிவித் துள்ளார். மேலும், ’’யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கம் பல வீதிகளையும் அடிப்படைக்கட்டுமான வசதிகளையும் வடக்கில் கட்டியெழுப்பியுள்ளது.
ஆனால், வடக்கில் உள்ள பல தமிழர்கள் தாம் தொடர்ந்து ராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாகவே உணர்கிறார்கள்.
இந்நிலையில், தமிழர்கள் தமது பகுதியில் சுயமாக, கட்டுமான வசதிகளையும் வடக்கில் கட்டியெழுப் பியுள்ளது. ஆனால், வடக்கில் உள்ள பல தமிழர்கள் தாம் தொடர்ந்து ராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாகவே உணர்கிறார்கள்.
இந்நிலையில், தமிழர்கள் தமது பகுதியில் சுயமாக, கட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கு இலங்கை அரசாங்கம் வழிசெய்ய வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment