இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'விஸ்வரூபம்'. கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிக்க, கமல் இயக்கி வருகிறார். ஷங்கர்-இஷான்-லாய் இசையமைத்து வருகிறார்கள்.
'விஸ்வரூபம்' ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை. இதுவரை கமல் நடித்த படங்கள் எல்லாவற்றையும் விட அதிக பொருட்செலவில் தயாராகும் படம் 'விஸ்வரூபம்'.
'விஸ்வரூபம்' படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் LEE WHITTAKER. இவர் மைக்கேல் பே இயக்கிய 'PEARL HARBOUR' படத்திற்கு ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்தவர். அர்னால்ட், ஜார்ஜ் க்ளூனி, ப்ரூஸ் வில்லிஸ் போன்றோருடன் பணியாற்றியிருக்கிறார். இவர் பணியாற்றும் முதல் இந்திய திரைப்படம் இது தான்.
முதலில் இப்படத்தில் பணியாற்ற படக்குழு LEE WHITTAKER-ரிடம் கேட்ட போது, முடியாது என்று தவிர்த்து விட்டாராம். பின்னர் கமல் நடித்த படங்களில் இருந்து சண்டைகாட்சிகளை போட்டு காண்பித்து இருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளில் கமலின் ஈடுபாட்டை பார்த்ததும் ஒப்புக் கொண்டுள்ளார்.
கமல் மற்றும் ராகுல் போஸ் இருவரும் மோதும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை வடிவமைத்து வருகிறார் LEE WHITTAKER. கமல் ரிஸ்க்கான சண்டைக்காட்சியில் எல்லாம் டூப் இல்லாமல் தானாகவே நடித்து கொண்டு இருக்கிறார். கமலுக்கு சினிமாவின் மீதுள்ள ஈடுபாட்டைக் கண்டு அசந்து போனாராம் லீ.
சண்டைக்காட்சியில் கமலின் விஸ்வரூபத்தை பார்த்து மெய் சிலிர்த்து நிற்கிறதாம் படக்குழு.
kalakuinga thaliva
ReplyDelete