நடிகை ரஞ்சிதா- நித்யானந்தா சாமியார் ஆபாச வீடியோ காட்சிகள் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆபாச வீடியோவை பெங்களூர் ஆசிரமத்தில் பணிபுரிந்து வந்த நித்யானந்தாவின் சீடர் லெனின் ரகசியமாக படம் பிடித்து வெளியிட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக ஆசிரமம் சார்பில் லெனின் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் புகார் செய்யப்பட்டது. இதனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள் இந்த வழக்கில் லெனின் இதுவரை கைது செய்யப்படாமலேயே இருந்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் சீடர் லெனின் இன்று திடீரென கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு சென்று போலீசாரிடம் சரண் அடைந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக லெனினை அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது எதிர்முனையில் அவரது நண்பர் என்று கூறி ஒருவர் பேசினார். அவர் கூறும் போது, லெனின் சி.பி.சி.ஐ.டி, அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளதாகவும் நித்யானந்தா மீது புதிய புகார் ஒன்றை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment