மூன்றாவது அணி அமைக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று நேற்று பாராளுமன்றத்துக்கு வந்த உத்தரபிரதேச மாநில முதல்வராய் பொறுப்பு ஏற்கவுள்ள அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். அவரை சூழ்ந்த வெவ்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுக்கும் ஊடகங்களுக்கும் அவர் இந்த பதிலை அளித்தார்.
மேலும், மூன்றாவது அணி அமைப்பது குறித்த முடிவுகளை சமாஜ்வாடி கட்சியின் தலைர் முலாயம் சிங் யாதவ் தான் எடுப்பார் என்றும் அவர் கூறினார். தன்னுடைய பதவி ஏற்பு விழாவுக்கு மேற்குவங்கம்,தமிழ்நாடு ஆகிய இரு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது மரபு சார்ந்தது என்றும் அதுமட்டுமின்றி தன்னுடைய பதவி ஏற்பு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்படி மூன்றாவது அணி அமையும் பட்சத்தில் அதன் பிரதம வேட்பாளராக அகிலேஷ் அறிவிக்கப்பட்டால்...காங்கிரஸ் நம்பி கொண்டிருக்கும் இளைய தலைவர், ,என்றும் இளைஞர்.... இந்தியாவின் இளம் பிரதமர் வேட்பாளர் போன்ற கனவுகளோடு உலாவரும் ராகுலின் வண்ணவண்ண கனவுகள் வானவில்லின் வண்ணங்கள் போன்று மறைந்து போகலாம்...
அகிலேஷ் யாதவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா உடனிருந்தார்.
No comments:
Post a Comment