ஐக்கிய நாடுகள் சபை நைரோபியில் இளைஞர் நலம் பற்றிய சர்வதேச மாநாட்டை நடத்துகிறது. வருகிற 15-ந் தேதி முதல் இந்த மாநாடு நடக்க உள்ளது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பிரபலங்கள் பங்கேற்று பேச உள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து நடிகை குஷ்பு அழைக்கப்பட்டார். இது குஷ்புவுக்கு கிடைத்த பெரிய கவுரவமாக கருதப்பட்டது. ஐ.நா. சபை மாநாட்டில் பேசுவதற்காக மகளிர் முன்னேற்றம் மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலம் என்ற தலைப்புகளில் குறிப்புகள் தயார் செய்து வைத்திருந்தார்.
மாநாட்டுக்கு புறப்படுவதற்காக சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்தையும் அவசரமாக முடித்து விட்டு சென்னை திரும்பினார். ஆனால் குஷ்புவின் மாமியாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஐ.நா. மாநாட்டுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஐ.நா. பய ணத்தை அவர் ரத்து செய்துவிட்டார்.
இதுகுறித்து குஷ்பு அளித்த பேட்டி வருமாறு:-
என் குடும்ப சூழ்நிலை காரணமாக ஐ.நா. மாநாட்டுக்கு செல்ல முடியவில்லை. எனது மாமியாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வருகிற 15-ந் தேதி வாக்கில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
கடந்த சனிக்கிழமை ஆஞ்சியோ கிராம் நடந்துள்ளது. எனக்கு குடும்ப பொறுப்புகள்தான் முதலில் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். மாமியார் உடல் நலக்குறைவாக இருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் ஐ.நா. சபை மாநாட்டுக்கு செல்வது என்பது இயலாத காரியம். மாநாட்டில் பங்கேற்க இயலாத நிலை குறித்து ஏற்கனவே ஐ.நா. சபைக்கு கடிதம் அனுப்பி விட்டேன்.
ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க எதிர்காலத்தில் வாய்ப்பு கிட்டலாம். ஆனால் மாமியாருக்கு உதவியாக அவர் பக்கத்தில் இருப்பதுதான் இப்போது எனக்கு முக்கியம்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.
விழுந்தாலும் மீசையில் மண் படலையே!
ReplyDelete