திறமைசாலிகள் யாராக இருந்தாலும் அவர்களை தன் வீட்டுக்கே வரவழைத்து சினிமா கதை பேசிக் கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பொழுதுபோக்குகளில் ஒன்று. அப்படி அவரை பார்க்கப் போகிறவர்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அடுத்த படத்தை இவர்தான் இயக்கப் போகிறார், தெரியுமாக்கும் என்று கிளப்பிவிட்டுவிடும் மீடியா. (அப்படி பார்த்தால் ரஜினியை வைத்து எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு நூறு படத்தையாவது இயக்கியிருக்க வேண்டும். அமீர் கணக்கில் ஒரு இருபத்தைந்து) ஆனால் இந்த பேச்சும் சுவாரஸ்யமும் ரெண்டு மூணு டீ கோப்பைகளோடு முடிந்து போகிற சமாச்சாரம் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரியும்.
இதில் கே.வி.ஆனந்த்-ரஜினி சந்திப்பின் பின்னணியும் கதையும் என்ன? தோண்டி துருவி ஆராய்ந்து அலசிதான், இருவரும் படம் பண்ணவிருக்கிறார்கள் என்று எழுதினார்களாம்.
ஆனால் இதையெல்லாம் மறுத்து தனது ட்விட்டரில் சிரித்திருக்கிறார் கே.வி.ஆனந்த். மாற்றான் படம் துவங்கப்படுகிற நேரத்தில் அப்படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக சூர்யா இரு வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறியிருந்தோம். ஆனால் இதை அப்போது தெளிவாக மறுத்தார் கே.வி.ஆனந்த். உண்மை நாம் சொன்னதுதான் என்பது இப்போது மெல்ல மெல்ல தெளிவாகி வருகிறது.
ரஜினி விவகாரத்தையும் அப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
No comments:
Post a Comment