போர் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகம் முழுக்க தமிழர்கள் கண்ணீர் வடித்து வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் போர் குற்றவாளியான ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாழில் வழங்கப்படுகிறது.
அதற்காக டெல்லிக்கு வரும் ஜூனியர் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என அவருக்கு இசட் (Z ) பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியிருக்கிறது.
வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் வீரதமிழன் இதையும் வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருப்பான். தமிழ் தலைவனின் பிஞ்சு குழந்தையை(மகனை) கோழைத்தனமாக கொடூரமாக கொன்ற ராஜபக்சேவை பாராட்டும் விதமாக அவரது மகனுக்கு விருதா...?சர்வதேச இளைஞன் விருதாம்....!
எங்கே....இங்கே ஒரு தமிழன் கூடவா இல்லை ...! இப்போது புரிகிறதா தமிழா உன் நிலைமை என்னவென்று ....! இது தான் இன்று உன் நிலை....!
என் மதிப்புக்குரிய சர்வதேச மனித சமுதாயமே...உங்களில் யாருக்கேனும் சர்வதேச அளவிலான இந்தியாவின் உயரிய விருது வேண்டுமா....!? தமிழனை கொல்லுங்கள் இந்தியாவின் உயரிய விருதுகளை வெல்லுங்கள்....!!!
தண்டனை கிடைக்கும் என்ற பயம் வேண்டாம்....கேட்பதற்கு நாதியில்லாதவன் தான் இவன்....(மிருகங்களை கொன்றால் கூட ஆயிரம் கேள்வி கேட்க்க ஆள் உண்டு, தண்டனைகளும் உண்டு ஆனால் இவனை (தமிழனை ) கொன்றால் தண்டனை இல்லை விருதுகளே பரிசாகும்........
No comments:
Post a Comment