பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். ராக்கி சாவந்த் திடீரென்று பாராளுமன்றத்துக்கு வந்தார். அவரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த பார்வையாளர்கள் திரண் டார்கள். எம்.பி.க்களும் எட்டி பார்த்தனர். ராக்கிசாவந்த் அனுமதி சீட்டு வாங்கி நேராக பாரா ளுமன்ற கூட்டம் நடைபெறும் சபைக்கு சென்றார்.
அங்கு சிறிது நேரம் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தார். எம்.பி.க்களின் விவாதங்களையும் கவன முடன் கேட்டார். பின்னர் வெளியே வந்த ராக்கி சாவந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்றத்துக்கு வரும்படி யாரும் என்னை அழைக்கவில்லை. நானா கத்தான் எம்.பி.க்களை சந்திக்கவும் பாராளுமன்ற கூட்ட நிகழ்ச்சிகள் எப்படி நடக்கிறது என்பதை காண வும் நமது தலைவர்கள் எப்படி பணியாற்றுகிறார்கள் என்பதை பார்க்கவும் வந்தேன். அனைத்து மக்கள் மற்றும் பெண்கள் சார்பாக சோனியா காந்தியை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதுதான்.
யோகா குரு ராம்தேவ் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அவர் எல்லா அரசியல்வாதிகளையும் திருடர்கள் போல் பார்க்க கூடாது. யோகா வேலையை மட்டும் பாபாராம் தேவ் செய்தால் போதும். அரசியல்வாதிகளை இழிவு படுத்தி பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராக்கி சாவந்த் கடந்த வருடம் பாபாராம்தேவை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment