இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. வற்புறுத்தி வருகிறது. பாராளுமன்றத்தில் இதுகுறித்து நடந்த விவாதத்தில் கனிமொழி எம்.பி., சிவா எம்.பி. ஆகியோர் வற்புறுத்தி பேசினார்கள்.
இலங்கைக்கு ஆதரவாக மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்த கருத்துக்கும் தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார். இந்த கருத்தை தொடர்ந்து அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கக் கோரி வரும் 22-ந் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கருணாநிதி அறிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்றத்தில் இன்று இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியாவின் ஆதரவு குறித்தான பிரதமரின் அறிவிப்புக்கு தான் வரவேற்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்க்கு முன் இவர் இருந்த உண்ணாவிரத நாடகமாவது ஒரு மணி நேரம் நீடித்தது ஆனால், இப்போது அறிவித்த உடனேயே உண்ணாவிரதம் முடிவு பெற்று விட்டது. ஆம், மத்திய அரசு அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க போவதாக அறிவித்துள்ளது. எல்லாம் தெரிந்து வைத்து கொண்டு தான் இப்படி எல்லாம் பேசுகிறாரோ நமது தமிழின் ஈனத்தலைவன் ....
No comments:
Post a Comment