ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரான்சு, நார்வே ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானம் மீது வருகிற வெள்ளிக்கிழமை (23-ந்தேதி) ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.
இறுதிக்கட்ட போரின் போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கையை தண்டிக்க வேண்டுமானால் ஐ.நா.சபையில் அந்த நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அ.தி.மு.க., தி.மு.க. உள்பட எல்லா தமிழக கட்சிகளும் இந்த பிரச்சினையில் ஓரணியில் திரண்டுள்ளதால் மத்திய அரசு தவிப்புக்குள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் பட்ஜெட் குறித்தான கேள்வி நேரத்தில் பேசுகையில்:-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் முழுமையான விவரம் ஏதும் தெரியவில்லை. அமெரிக்காவின் தீர்மான வாசகத்தை முழுமையாக படித்து முடித்துவிட்டு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும். என்று கூறினார்.
No comments:
Post a Comment