ஜிம்பாப்வே அணியுடன்
நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதுடன் (137 ரன்), இரண்டு இன்னிங்சிலும் தலா
5 விக்கெட் வீழ்த்தி ஆல் ரவுண்டராக ஜொலித்தார் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன். டெஸ்ட்
கிரிக்கெட் வரலாற்றில், ஒரே போட்டியில் சதம் மற்றும் 10 விக்கெட் வீழ்த்தும் சாதனையை
நிகழ்த்தியுள்ள 3வது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, இங்கிலாந்தின்
இயான் போத்தம் (1980), பாகிஸ்தானின் இம்ரான் கான் (1983) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
No comments:
Post a Comment