ஐ.பி.எல். கிரிக்கெட்
சூதாட்டம் தொடர்பாக முன்னாள் நீதிபதி முட்கல் கமிட்டி
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இறுதி
விசாரணை அறிக்கையில் இந்திய கிரிக்கெட் வீரர்
ஒருவர் பெயரும், ஆதாயம் தரும் பதவி
குறித்த குற்றச்சாட்டில் கேப்டன் டோணியின் பெயரும்
இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
6வது ஐ.பி.எல்.
டி20 கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம்
2 நபர்களை கொண்ட விசாரணை குழுவை
அமைத்தது. அந்த குழு மீது
நம்பிக்கையில்லை என்று கூறி, பீகார்
கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்ய
வர்மா என்பவர், 2013ம் ஆண்டு ஜூன்
மாதம் பாம்பே ஹைகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார்.
ஐபிஎல்
சூதாட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலான முட்கல் கமிட்டி அறிக்கையில்
டோணி பெயர்?
இந்த மனுமீது விசாரணை நடத்திய
ஹைகோர்ட்டும், பிசிசிஐ விசாரணை குழு
சட்ட விரோதமானது என்று அறிவித்தது. இதை
எதிர்த்து பிசிசிஐ உச்ச நீதிமன்றம்
சென்றது. ஆனால் அங்கும், பிசிசிஐக்கு
எதிராகவே உத்தரவு வந்தது.
ஓய்வு பெற்ற ஹைகோர்ட்டு நீதிபதி
முகுல் முட்கல் தலைமையிலான 3 பேர்
விசாரணை கமிஷன் விசாரணை நடத்த
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த கமிட்டி தனது இறுதி
அறிக்கையை நேற்று உச்ச நீதிமன்றத்தில்
தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை
இம்மாதம் 10ம் தேதி உச்ச
நீதிமன்றத்தில் வர உள்ளது.
விசாரணை
அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து
முட்கல் தெரிவிக்க மறுத்துவிட்டாலும், அதிலிருந்து சில தகவல்கள் கசிந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர்
சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன்,
சூதாட்ட புக்கிகளிடம் பேசியதாக கூறப்படும் உரையாடல்கள் அடங்கிய சிடி ஆதாரம்
அந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல,
உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்
பெற்றிருந்த இந்திய வீரர் ஒருவர்
பெயரும் புக்கிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர் பட்டியலில்
உள்ளதாம். அந்த வீரர், இந்திய
அணிக்கு வருவதும் போவதுமாக இருக்கும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்திய அணி மற்றும்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
கேப்டன் டோணியின் பெயரும் அறிக்கையில் இடம்
பெற்றுள்ளது. ஆனால் புக்கிகளுடன் டோணிக்கு
தொடர்பு இருந்ததாக அறிக்கை குற்றம்சாட்டவில்லையாம்.
டோணி ஆதாயம் தரும் பொறுப்புகளில்
இருந்ததாக முட்கல் கமிட்டி அறிக்கையில்
குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. இந்திய
அணியின் கேப்டனாக இருக்கும் டோணி தனது நண்பர்
நடத்தும் ரித்விக் நிறுவனம் மூலம் பலன் அடைந்து
உள்ளார். இந்த நிறுவனத்தில் டோணிக்கு
15 சதவீத பங்குகள் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி
இருந்தது. இதுதவிர அவர் ஆதாயம்
தரக்கூடிய பொறுப்புகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர்
10ம்தேதி விசாரணை ஆரம்பிக்கும்போது இந்திய
கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயல் வீசப்போவது
என்னவோ நிச்சயம்.
No comments:
Post a Comment