கேரளாவை
அடுத்து கொல்கத்தாவில் இன்று இளைஞர்கள் முத்தப்
போராட்டம் நடத்த உள்ளனர்.
கேரளாவில்
ஒரு காபி கடையில் ஆண்களும்,
பெண்களும் அநாகரீகமாக நடந்து கொள்வதாகக் கூறி
பாஜக இளைஞர் அணியினர் அந்த
கடையை சேதப்படுத்தினர். இதை கண்டித்து சுதந்திர
சிந்தனையாளர்கள் என்ற ஃபேஸ்புக் ஆர்வலர்கள்
அமைப்பு கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை முத்த போராட்டம் நடத்தியது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில
தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரபல ஜாதவ்பூர்
பல்கலைக்கழக மாணவர்களும் இன்று முத்த போராட்டத்திற்கு
அழைப்பு விடுத்துள்ளனர்.
கேரளாவை
அடுத்து கொல்கத்தாவில் இருக்கி அணைச்சு உம்மா
கொடுக்கும் போராட்டம்
சிலர் தானாக வந்து இளம்
ஜோடிகளை தாக்குவதை கண்டித்து இந்த போராட்டம் நடத்துகிறோம்.
இதில் பொது மக்களும் கலந்து
கொள்ளலாம் என்று பல்கலைக்கழக மாணவர்
நபோத்தமா பால் தெரிவித்தார்.
இது குறித்து பால் மேலும் கூறுகையில்,
மாணவர்கள்
மனிதச் சங்கிலி அமைத்து, பல்கலைக்கழக
வளாகத்தில் நடந்து சென்று பின்னர்
கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து போராடுவார்கள்.
அதன் பிறகு அவர்கள் பல்கலைக்கழகம்
எதிரே உள்ள பேருந்து நிலையத்திற்கு
சென்று போராடுவார்கள் என்றார்.
இதே போன்று பிரெசிடென்சி பல்கலைக்கழக
மாணவர்களும் முத்தப் போராட்டம் நடத்த
முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment