விண்வெளியில்
சுற்றி வரும் மர்ம செயற்கைக்கோளை
ரஷ்யா ஏவியிருக்கலாம் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்
கருதுகின்றனர். எதிரிநாட்டு ஏவுகணைகளை அழிக்கும் பணியில் இது ஈடுபடலாம்
என சந்தேகம் எழுந்துள்ளது. விண்வெளியில் ஒரு மர்ம செயற்கைக்கோள்
சுற்றி வருவது சர்வதேச விண்வெளி
ஆராய்ச்சியாளர்களை கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு
‘ஆப்ஜெக்ட் 201428இ’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இந்த செயற்கைக்கோள்
தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு
மேலே ஆஸ்திரேலியாதென் அமெரிக்கா இடையே இருந்தது. இந்த
செயற்கைக்கோள் கடந்த மே மாதம்
ஏவப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால்,
இந்த ரகசிய செயற்கைக்கோள் பற்றி
எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. முதலில் இது செயல்
இழந்த செயற்கைக்கோளாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால்,
அதன் செயல்பாடு குழப்பமாக இருந்ததால், அது புதிய செயற்கைக்கோள்
என அமெரிக்கா கண்டறிந்தது. கடந்த வாரம் இந்த
செயற்கைக்கோள் ஒரு குறிப்பிட்ட இலக்கை
நோக்கி சென்றது.
விண்வெளியில்
மிதக்கும் செயல் இழந்த செயற்கைக்கோள்களின்
பாகங்களை அகற்றும் பணியில் இது ஈடுபட்டிருக்கலாம்
அல்லது மற்ற செயற்கைக்கோள்களுக்கு தேவையான எரிபொருள்
வழங்கியிருக்கலாம் அல்லது பழுது நீக்கும்
பணியில் ஈடுபட்டிருக்கலாம் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்
கூறியுள்ளனர். எதிரி நாட்டு செயற்கைக்
கோள்களை அழிக்கும் பணிக்காக, இந்த மர்ம செயற்கைக்கோள்
அனுப்பப்படிருக்கலாம் எனவும் சில விஞ்ஞானிகள்
சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால், மர்ம செயற்கைக்கோள்
தனது இலக்கை இடைமறித்து தனது
பணிகளை முடித்து விட்டதாக அதை கண்காணித்த விஞ்ஞானிகள்
கூறியுள்ளனர். ஆனால் அதன் விவரம்
தெரியவில்லை.
செயற்கைக்
கோளை அழிக்கும் ஆயுதங்கள் கடந்த 1950ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன.
‘இஸ்ட்ரிபிடல் ஸ்புட்னிக்’ என்ற செயற்கைக்கோளை ரஷ்யா
கடந்த 1960ம் ஆண்டுகளில் உருவாக்கியது.
இது மற்ற செயற்கைக்கோள்களை குண்டு
வீசி அழிக்கும்.
பின் இத்திட்டத்தை ரஷ்யா
கைவிட்டது. அதன்பின் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள்
இதுபோன்ற செயற்கைக்கோள்களை அழிக்கும் ஆயுதங்களை சோதித்து பார்த்தன. பூமியில் விழும் அபாயம் உள்ள
செயல் இழந்த செயற்கைக்கோள்களை விண்வெளியிலேயே
தகர்த்து நொறுக்குவதற்காக இந்த வகை செயற்கைக்கோள்கள்
உருவாக்கப்பட்டன. இந்த வகை செயற்கைக்கோள்கள்
‘சைபர் போருக்கு’ வழிவகுக்கும் என்பதால் இத்திட்டத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு
கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment