பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்துவதை (Public Display of Affection) அச்சுறுத்தும் விதமாக வளர்ந்து வரும்
சகிப்புத்தன்மை எதிர்த்து, கேரளாவின் கொச்சியில் நடைபெற்ற காதல் முத்தப் போராட்டம்
(Kiss of Love) தேசம் தாண்டியும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
முன்கூட்டியே
அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டத்துக்கு, கேரளாவில்
இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பைச்
சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதைப் போராட்ட வடிவிலும்
பதிவு செய்தனர்.
ஃபேஸ்புக்
போன்ற சமூக வலைதளங்களில் வரவேற்பு
பெறப்பட்ட நிலையில், கொச்சியில் இந்தப் போராட்டம் நேற்று
(ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது. பொது இடத்தில் முத்தமிடுதல்
என்ற அம்சத்தைக் கொண்ட இந்தப் போராட்டத்தில்
அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்றனர்.
இந்தப்
போராட்டத்துக்கு எதிரானவர்களும் அங்கே குவியத் தொடங்க,
முன்னெச்சரிக்கையாக போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். முத்தமிட்டுப் போராட்டம் மேற்கொண்ட 30 இளைஞர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சாலைகளில்
ஒருவருக்கொருவர் முத்தமிட்டு போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்து வாகனங்களில்
ஏற்றினர். அந்த வாகனத்துக்குள்ளும் தங்கள்
போராட்டத்தை அவர்கள் முத்தமிட்டுத் தொடர்ந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் நேற்று
இரவு விடுவிக்கப்பட்டனர்.
ஹைதராபாத்திலும்
காதல் முத்தப் போராட்டம்
ஹைதராபாதில்
உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் கேரள
மாணவர்கள் நேற்று மாலை காதல்
முத்தப் போராட்டத்தை நடத்தினர். அப்போது இவர்களுக்கு எதிர்ப்பு
தெரிவித்து மற்றொரு குழு மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல்
நிலவியது.
மேலும்,
இந்த போராட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து
பாஜக-வின் இளைஞர் பிரிவான
பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா
மற்றும் ஏ.பி.வி.பி பிரிவினர் அங்கு
கூடியதால் ஹைதராபாதின் பல இடங்களில் பதற்றம்
ஏற்பட்டது. இதனால் அங்கு கேரள
மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
ஹேக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் பக்கம்?
இதனிடையே,
காதல் முத்தப் போராட்டம் (Kiss of Love) மேற்கொண்ட அமைப்பினர்
இன்று காலை தங்களது ஃபேஸ்புக்
பக்கம் முடக்கப்பட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அந்த
இயக்கத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் ராகுல்
பசுபாலன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "எங்களது போராட்டத்தை எப்படியாவது
தடுத்து நிறுத்தலாம் என்று நினைத்தார்கள். ஆனால்,
அது முடியாமல் இப்போது எங்களது ஃபேஸ்புக்
பக்கங்களை முடக்கி உள்ளனர். போராட்டத்தை
ஒடுக்க ஆயுதத்துடன் குழுவினர் வந்தனர்.
இந்த ஹேக்கிங்கை பார்த்தவுடன் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு பயங்கரவதிகளுக்கு தொடர்பு உள்ளது என்று
நாங்கள் அஞ்சுகிறோம்.
நாங்கள்
எங்களது பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக
கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ்
சென்னித்தாலாவிடம் புகார் அளித்துள்ளோம். ஹேக்கர்களின்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தி
உள்ளோம். ஃபேஸ்புக்கில் எங்களுக்கு எதிராக செயல்படும் அந்த
இயக்கத்தால் இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டுள்ளது.
அவர்கள் எங்கள் இயக்கத்தின் பெண்களை
இழிவாக சித்தரித்து படங்களை பரப்பினர். அதன்
மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளோம்" என்றார்.
இதனிடையே,
காதல் முத்தப் போராட்டம் நடத்தும்
இயக்கத்தினரின் ஃபேஸ்புக் பக்கங்கள் அடுத்து சில மணி
நேரங்களில் மீட்கப்பட்டது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில்
இந்தப் போராட்டம் பெரிய அளவில் விவாதத்துக்குள்ளான
நிலையில், இந்த இயக்கத்தின் பக்கம்
சுமார் 80,000 விருப்பங்களை நெருங்கி உள்ளது. ஆனால், காதல்
முத்தப் போராட்டம் நடத்தப்பட்ட நவம்பர் 2-ஆம் தேதி உலக
அளவில் கொச்சி அவமானப்படுத்தப்பட்ட தினம்
என்று எதிர் கருத்து நிலவுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தப்
போராட்டம் ஏன்?
முன்னதாக,
கொச்சியில் உள்ள காபி ஷாப்
ஒன்றில் காதலர்கள் என்ற பெயரில் ஆண்களும்
பெண்களும் அநாகரீகமாக நடந்து கொள்வதாகக் கூறி,
பாஜக இளைஞர் அணியினர் அந்த
ஷாப்பை கடந்த வாரம் தாக்கி
கடுமையாக சேதப்படுத்தினர். இவை சி.சி.டி.வி.யில்
பதிவான நிலையில், பாஜக கொடியுடன் சிலர்கள்
கடையை தாக்கிய காட்சிகள் சமூக
வலைதளங்கள் தீவிரமாக பரவியது.
இதைக் கண்டித்து சுதந்திர சிந்தனையாளர்கள் (Free Thinkers)
என்ற ஃபேஸ்புக் வலைதளத்தில் இயங்கும் ஆர்வலர்கள் அமைப்பு கொச்சி மரைன்
டிரைவ் என்ற போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை
மாலை 'காதல் முத்தம்' என்ற
பெயரில் முத்தமிடும் போராட்டமாக நடத்தினர்.
கலாச்சார
காவலர்களுக்கு எதிரான இந்தப் போராட்டம்,
கேரளம் மட்டுமின்றி, தேசத்தைத் தாண்டியும் கவனத்தை ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது.
ட்விட்டரில்
#KissOfLove என்ற ஹேஷ்டேக் இன்று இரண்டாவது நாளாக
ட்ரெண்டிங்கில் நீடிப்பதும் இதன் தீவிரத்தை உணர்த்துகிறது.
No comments:
Post a Comment