கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதானவர் சரிதா நாயர். கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோ ‘வாட்ஸ் ஆப்’ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்புகளுக்கு இடையே ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.
‘ஹெல்ப்காரன்றே பாரியா‘ (அரபு நாட்டில் பணிபுரிபவரின் மனைவி) என்ற இந்தப் படம் நேற்று (6ம் தேதி) ‘யு டியூபில்’ வெளியிடப்பட்டது. 15 நிமிடம் ஓடும் இந்தப் படத்தில் பல வருடங்களாக அரபு நாட்டில் பணிபுரிந்து வரும் ஒரு தொழிலாளியின் மனைவி ஊரில் படும் அவஸ்தைகள் குறித்து விவரிக்கப்படுகிறது. ஹரீஷ் சந்திரன் என்பவர் கதை, திரைக்கதை எழுதியுள்ள இந்தப் படத்தை ஜோஷி மேடயில் இயக்கி உள்ளார்.
இந்தக் குறும்பட வெளியீடு குறித்து ஆலப்புழாவில் சரிதா நாயர் கூறியது: நான் நடித்துள்ள இந்த குறும்படம் சமூகத்தில் நிச்சயம் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இதில் நடிக்க நான் பணம் எதுவும் வாங்கவில்லை. நான் வழக்குகளில் சிக்குவதற்கு சிலரின் அரசியல் சதித்திட்டம் தான் காரணம். என்னை சிக்க வைத்தவர்கள் யார்? யார்? என்பது குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment