என் குழந்தையை எனக்கு எதிராக பேசும்படி தூண்டி விட்டுள்ளனர் என்று நடிகை வனிதா கூறியுள்ளார். நடிகை வனிதாவுக்கும், அவரது முதல் கணவர் ஆகாஷூக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை சொந்தம் கொண்டாடி இருவரும் கோர்ட், கேஸ் என்று அழைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குழந்தை, அம்மாவிடம்தான் வளர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் தந்தை நடிகர் விஜயகுமாரிடம் இருந்த குழந்தை ஸ்ரீஹரியை கேட்டு, சென்னை விமான நிலையத்தில் நடிகை வனிதா விஜயகுமாருடன் சண்டை போட்டார். நடுரோட்டில் நடந்த இந்த சண்டையை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். விஜயகுமார் வனிதாவை பிடித்து தள்ளி வாக்குவாதம் செய்தார். விடிய விடிய நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து குழந்தையை தந்தை ஆகாஷின் அம்மாவிடம் போலீசார் ஒப்படைந்தனர்.
இந்நிலையில் வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ், வனிதா மற்றும் அவரது 2வது கணவர் ஆனந்தராஜ் மீது கோர்ட் அவமதிப்பு தொடர்ந்துள்ளார். அதில், நடிகை வனிதா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் மகன், விஜய்ஸ்ரீஹரியை அவரிடத்தில் 2 வாரத்தில் ஒப்படைக்கும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் உத்தரவு பிறப்பித்த 3வது நாளிலேயே விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்குமாறு அவரது தந்தை விஜயகுமாரிடம் சென்னை விமான நிலையத்தில் தகராறு செய்துள்ளார். வனிதா - ஆனந்தராஜின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே இந்த இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார். மேலும், விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்கும் கால அவகாசத்தை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிப்பு செய்ய கேட்டும் ஆகாஷ் மற்றொரு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே சிறுவன் விஜய் ஸ்ரீஹரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அப்பாவுடன் இருப்பதையே விரும்புவதாகவும், ஆனந்தராஜ் (வனிதாவின் 2வது கணவர்) தன்னை கொடுமை படுத்துவதாகவும், அம்மாவுடன் செல்ல மாட்டேன் என்றும் கூறினான். சிறுவனின் பாட்டி, மகேஸ்வரி கூறுகையில், “விஜய் ஸ்ரீஹரி சுதந்திரமா எங்களுடன் இருக்க விரும்புகிறான். வனிதாவிடம் சென்றால் செத்துவிடுவேன் என்கிறான். பள்ளிக்கு போனால் கடத்தி விடுவார்கள் என்று பயந்து வீட்டிலேயே இருக்கிறான்” என்றார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வனிதாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆவேசமாக பதில் அளித்தார். அதில், எனது மகன் விஜய் ஸ்ரீஹரி சிறுவன். அவனிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி குழப்பி வைத்துள்ளனர். எனக்கு எதிராக இதுபோல் பேசும்படி தூண்டி விட்டுள்ளனர். இது கேவலமான காரியம். என் குழந்தையின் எதிர்காலம் எனக்கு முக்கியம். அவன் பள்ளி சொல்லாமல் கஷ்டப்படுவதை பார்த்து மனதுக்கு சங்கடமாக இருக்கிறது. சுய நலத்துக்காக குழந்தையை பயன்படுத்துவது தவறான செயல். குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்கணும். நானும் ஆனந்தராஜூம் படும் கஷ்டங்கள் எங்களுக்குத்தான் தெரியும். குழந்தையை என்னிடம் ஒப்படைக்காமல் இருக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் உள்ளனர். குழந்தை நலனுக்காக நான் பொறுமையாக இருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம், என்றார்.

No comments:
Post a Comment