இந்தி நடிகைகள் கத்ரினா கயூப், பிரியங்கா சோப்ரா வீடுகளில் வருமான வரி துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள். இருவரும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளான உள்ளனர்.
ஒரு படத்தில் நடிக்க ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ரூ.3 கோடி வரை வாங்குகின்றனர். ஜவுளி கடை, நகை கடை திறப்பு, விழாக்களில் பங்கேற்று கோடி, கோடி யாய் சம்பாதிக்கின்றனர். பிரியங்கா சோப்ரா, “தமிழன்” என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவ்விரு நடிகைகளும் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா, கத்ரினா கயூப் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முற்றுகையிட்டனர். வீட்டின் அனைத்து அறைகளிலும் சோதனை போட்டார்கள். பிரியங்கா சோப்ராவின் வங்கி கணக்குகள் சொத்து பத்திரங்கள் போன்றவற்றை வாங்கி ஆய்வு செய்தனர்.
இது போல் கத்ரினாகயூப் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பற்றியும் விசாரித்தார்கள். பல மணி நேரம் இந்த சோதனை நிடித்தன. இருவரும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான தஸ்தா வேஜுகள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment