இந்தியில் மணிரத்னத்தின் ராவணன் படத்தில் சிறிய ரோலில் அறிமுகமான ப்ரியாமணி, அடுத்தப்படியாக ராம்கோபால் வர்மாவின் ரத்த சரித்திரம் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார். இந்நிலையில் இந்தியில் அடுத்து முழுநீள ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். அதுவும் ஜெனிலியாவின் கணவரும், பாலிவுட்டின் இளம் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கிற்கு ஜோடியாக. இதுகுறித்து அவர் கூறுகையில், டைரக்டர் சந்திரகாந்த் சிங் இயக்கும் புதிய படத்தில், ரித்தேஷ் ஜோடியாக நடிக்கிறேன். இன்னும் இப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை, விரைவில் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது.
தற்போது ரித்தேஷ், விரைவில் வெளியாக இருக்கும் தேரே நாள் லவ் ஹோ கயா எனும் படத்திற்கான புரோமஷனல் வேலையில் பிஸியாக இருக்கிறார். இது எல்லாம் முடிந்த பிறகு சந்திரகாந்த் சிங் இயக்கும் படத்தில் நடிப்பார் எனத்தெரிகிறது.
No comments:
Post a Comment